Home » மருத்துவம் & சுகாதாரம் » சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடற்பயிற்சிக்கு முன் எலுமிச்சைச் சாறு அருந்தினால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் சோர்வு, களைப்பு நீங்கும்.

👤 Sivasankaran27 Feb 2019 11:02 AM GMT
சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Share Post

உடல் எடை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, செரிமான சக்தியை வலுப்படுத்தும். மெல்ல மெல்ல உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

செரிமானப் பிரச்னைகளைத் தீர்ப்பதோடு, சருமம், முடி தொடர்பான பல பிரச்னைகளைத் தீர்க்க உதவும். அதோடு சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும்.

உடற்பயிற்சிக்கு முன் எலுமிச்சைச் சாறு அருந்தினால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் சோர்வு, களைப்பு நீங்கும்.

`உடலில் தேவையான அளவு வைட்டமின் சி இருப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயம் வெகு குறைவு' என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். அதோடு, `காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகச் சாப்பிட்டால், சர்க்கரைநோய் வருவதை ஓரளவுக்குத் தடுக்கவும் செய்யலாம்' என்கின்றன சில ஆய்வுகள். மெட்ஃபார்மின் (Metformin) போன்ற சர்க்கரைநோய்க்கான சில மருந்துகளுடன், வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது டைப் 2 சர்க்கரைநோயைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும். ஓர் ஆய்வில், சர்க்கரை நோயாளிகளுக்கு மெட்ஃபார்மினுடன் பன்னிரண்டு வாரங்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவுக்கு முன்னரும், உணவுக்குப் பின்னரும் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் ஹீமோகுளோபின் (HbA1C Glycosylated Haemoglobin) அளவு, மற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு இருப்பதைவிடக் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி அளவில் பாதியை, ஓர் எலுமிச்சைப் பழம் கொடுத்துவிடும் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.

வைட்டமின் சி-யை மாத்திரையாக உட்கொள்ளும்போது, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகள் ஏற்படலாம். இயற்கையாக எலுமிச்சை கிடைக்க, செயற்கை வைட்டமின் சி நமக்கு எதற்கு? நாம் எலுமிச்சைப் பழத்தை பயன்படுத்தும்போது, அதன் புளிப்புத் தன்மை காரணமாக, குறைவாகத்தான் உட்கொள்வோம். எனவே, அதிக அளவில் வைட்டமின் சி உடலில் சேர்ந்துவிடுமோ என்கிற பயம் தேவையில்லை.