Home » மருத்துவம் & சுகாதாரம் » வேப்பம்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

வேப்பம்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும்.

👤 Sivasankaran6 March 2019 3:16 PM GMT
வேப்பம்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
Share Post

பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைந்துவிடும். உடலில் உள்ள சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைந்து விடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும். வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.