Home » மருத்துவம் & சுகாதாரம் » இயற்கை தரும் கோடைக்கேற்ற பானம் பதனீர்

இயற்கை தரும் கோடைக்கேற்ற பானம் பதனீர்

பதனீர் என்பது பனையில் இருந்து கிடைக்கின்ற சுவைமிக்க பானம். பனைகளின் பாளைகளைச் சீவி விட்டு, அதன்...

👤 Sivasankaran16 March 2019 3:38 AM GMT
இயற்கை தரும் கோடைக்கேற்ற பானம் பதனீர்
Share Post

பதனீர் என்பது பனையில் இருந்து கிடைக்கின்ற சுவைமிக்க பானம். பனைகளின் பாளைகளைச் சீவி விட்டு, அதன் நுனியில் இருந்து வடியும் நீரை சுண்ணாம்பு தடவி உள்ள பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இது இனிப்புச் சுவையுடன் கூடிய பானம்.

பதனீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

பதனீர் உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதனீருக்கு உண்டு.

பதனீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.

பதனீருடன் மஞ்சளை பொடிசெய்து அரை தேக்கரண்டி அதில் போட்டு குடித்தால் வயிற்று புண், தொண்டைப்புண், சீத கழிச்சல், வெப்ப கழிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

பதனீரில் உள்ள கால்சியம் சத்து பற்களை வலிமையாக்கும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கும்.

பதனீர் பித்தத்தை குறைக்கிறது. இனப்பெருக்க உறுப்புகளை புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும்.

கோடைக்காலத்தில் இயற்கை தரும் இளநீர், நுங்கு, பதனீர், மோர் போன்றவற்றை பருகுங்கள். செயற்கைப்பானங்களை குடித்து உடம்பை நோய்க்கு உள்ளாக்காதீர்கள்.