சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும் இளநீர்
இளநீரை சாப்பாட்டிற்கு முன், வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது. ஆஸ்துமா, சளி பிரச்சினைகள் உள்ளவர் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண் எல்லாவற்றிற்கும் நாம் நாடுவது இயற்கை தந்த அற்புதமான இளநீரை தான். சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.
உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர்.
இளநீரை சாப்பாட்டிற்கு முன், வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது. ஆஸ்துமா, சளி பிரச்சினைகள் உள்ளவர் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். உடல் சூட்டை தணிக்கும். சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும்.
செயற்கை பானங்கள் உடலுக்கு மேலும் சூட்டையே கொடுக்கும். இது தெரியாமல் இன்றைய தலைமுறையினர் பெருமைக்காக இளநீரை தவிர்த்து, பாட்டில்களில் விற்கப்படும் செயற்கை பானங்களை குடிக்கின்றனர்.
இயற்கை தந்த அற்புதமான பானமான இளநீரை பருகுவோம். இயற்கையைப் போற்றுவோம்.