Home » மருத்துவம் & சுகாதாரம் » சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்

சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்

இந்த பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால்,

👤 Sivasankaran21 April 2019 3:25 PM GMT
சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்
Share Post

சோம்பு பொதுவாக சமையலில் அதிகளவில் பயன்படுத்துவார்கள். சோம்பு (Fennel Seeds) என்பதை பெருஞ்சீரகம் என்றும் அழைப்பார்கள். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது.

சோம்பு உணவின் மனத்தை அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.

செரிமான பிரச்சனைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு, சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

சுவாச நோய்க்கு:

குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அப்போது சரியாக சுவாசிக்க முடியாது.

அந்த சமயங்களில் இந்த பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.

வாய் துர்நாற்றத்திற்கு:

அசைவ உணவுகளை சாப்பிடும்போது அனைவருக்கும் வாய் துர்நாற்றங்கள் அடிக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது.

சர்க்கரை நோய்க்கு:

சோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.

எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க:

தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள "அனீதோல்" எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.