Home » மருத்துவம் & சுகாதாரம் » உடல் புத்துணர்ச்சி பெற சுரைக்காய் சாப்பிடுங்கள்

உடல் புத்துணர்ச்சி பெற சுரைக்காய் சாப்பிடுங்கள்

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

👤 Sivasankaran6 May 2019 2:41 PM GMT
உடல் புத்துணர்ச்சி பெற சுரைக்காய் சாப்பிடுங்கள்
Share Post

சுரைக்காய் மிக எளிதாக கிடைப்பதால் அதன் பயனை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. இதில் என்ன சத்து இருக்கப் போகிறது என்றே பலரும் நினைக்கிறார்கள்.

உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை சாப்பிட வேண்டும்.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம் கொண்டிருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.

இவ்வளவு பயன்களை தரும் சுரைக்காயை சாப்பிட தவறாதீர்கள்.