Home » மருத்துவம் & சுகாதாரம் » அதிமதுரம் செய்யும் அற்புதங்கள்

அதிமதுரம் செய்யும் அற்புதங்கள்

அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

👤 Sivasankaran31 May 2019 2:50 AM GMT
அதிமதுரம் செய்யும் அற்புதங்கள்
Share Post

அதிமதுரம் என்பது பெயருக்கேற்பவே பல அற்புத குணங்களைக் கொண்டது. இனிப்பு சுவைக் கொண்டது. அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும், காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.

நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் (தலை மண்டை) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஒரு கிராம் அளவு அதிமதுரச் சூரணத்தை பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.