Home » மருத்துவம் & சுகாதாரம் » மலச்சிக்கல் நீங்க சில எளிய யோசனைகள்

மலச்சிக்கல் நீங்க சில எளிய யோசனைகள்

நார் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும்.

👤 Sivasankaran8 July 2019 12:11 PM GMT
மலச்சிக்கல் நீங்க சில எளிய யோசனைகள்
Share Post

இன்றைய நவீன சூழலில் பலவகையான உணவுப்பழக்கங்களால் மலச்சிக்கல் உண்டாகின்றது. மலசிக்கல் ஏற்பட்டால் ஒருவரால் எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது என்பது நாம் அறிந்ததே.

பீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது, எண்ணெய் அதிகம் உள்ள நொறுக்குத்தீனிகளை தின்பது போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணங்களாகும்.

1. மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

2. அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொள்ளலாம்.

3. மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

4. சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.

5. காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம்.

6. காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 - 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.

7. காரட் ஜுஸ் உடன் பசலைக்கீரை ஜுஸ், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறும் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.

8. நார் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.