ஆஸ்துமாவை விரட்டும் சுண்டைக்காய்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது .

சுண்டைக்காயை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சுண்டைக்காயில் பலவகை உண்டு. சுண்டைக்காய் சாப்பிடுவதால் பலவகையான நன்மைகளை பெறலாம்.
சுண்டைக்காயில் வைட்டமின் பி, சி உள்ளது. இரும்புச்சத்தும், கால்சியமும், பாஸ்பரசும் நிறைந்திருக்கிறது.
வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து விடும் சக்தி இதற்கு உண்டு. மூல வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.
சுண்டைக்காய் சாப்பிட்டால் தீராத இருமல் மற்றும் ஆஸ்துமாவை விரட்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது .இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாது உடலில் உண்டாகியிருக்கும் காயங்களை எளிதில் குணப்படுத்த வல்லது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இது பெருமளவு உதவியாக இருக்கும்.
சுண்டைக்காயின் நன்மைகளை தெரிந்து கொண்டு தான் நம் முன்னோர்கள் சுண்டைக்காய் கிடைக்கும் காலங்களில் அதை வாங்கி வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்தினர்கள்.