Home » மருத்துவம் & சுகாதாரம் » அக்ரூட்டுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அக்ரூட்டுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழிவுக்குக் காரணமான அனைத்து அபாய காரணிகளுக்கும் எதிராக செயல்படுகிறது.

👤 Sivasankaran31 Oct 2019 4:19 PM GMT
அக்ரூட்டுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Share Post

பருப்புகள் சாப்பிடுவது சுவைக்காக மட்டுமில்லை. இவை ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டும் அல்லாமல், நோய்களில் இருந்து குணமளிப்பதிலும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

அக்ரூட் உங்கள் ஆரோக்கியத்துக்கும் மற்றும் நல்வாழ்வுக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அக்ரூட், அதிக அளவிலான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் பன்மை செறிவுறாக் கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அவை, அக்ரூட்டை உங்கள் மூளைக்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த உணவாக மாற்றுகின்றன. உடலின் செரிமானம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பார்க்கின்ஸன் நோய் மற்றும் அல்சைமர் நோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன மற்றும் வலிப்பு நோய்கள் மற்றும் கை கால் வலிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.

இரத்த அழுத்த கொழுப்புகளைக் குறைக்கவும், இதயக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கவும் இவை உதவுகின்றன. ருமம் மற்றும் முடியில் ஏற்படும் முதுமைக்கான உடலியல் சார்ந்த அறிகுறிகளை குறைக்கும். அக்ரூட்டுகளை சாப்பிடுவது, புற்று நோய் ஏற்படும் அபாயத்தை, குறிப்பாக, ப்ரோஸ்டேட் சுரப்பி அல்லது மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அக்ரூட்டுகள் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. அக்ரூட், இரத்தத்தில் சர்க்கரை மிகை, அல்லது நீரிழிவுக்குக் காரணமான அனைத்து அபாய காரணிகளுக்கும் எதிராக செயல்படுகிறது.

அக்ரூட்டுகள், அதிக அளவில் கொழுப்புச்சத்தை கொண்டவையாக இருந்தாலும், அவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொண்டால், அவை உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவக் கூடியவை.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அக்ரூட்டுகள் சாப்பிடக் கூடாது.