வயிற்றுப்புண்ணை குணமாக்கிடும் அகத்தி கீரை
மாதத்தில் 2 முறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு.

அகத்தி என்றால் முதன்மை, முக்கியம் என்று பொருள். அகத்திக் கீரை உடலில் உள்ள ரத்த்தை சுத்தம் செய்யும். அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண்கள் ஆறிவிடும்.
அகத்திக்கீரையில் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. தயாமின் சத்து - 0.21 மிகி, ரைபோப்ளேவின்- -0.09 மிகி, வைட்டமின் சி - 169 மிகி உள்ளது.
இந்த கீரை ரத்தச்சோகையை நீக்கும். நுண்கிருமிகள் வளர்வதை தடுக்க கூடிய ஆற்றல் உள்ளது. நோய்க் கிருமி தொற்று உள்ளவர்கள் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆறாத நாள்பட்ட புண்கள் மீது அகத்தி கீரையை அரைத்து தடவினால் புண்கள் மிக விரைவில் ஆறிவிடும். அகத்தி கீரையை அரைத்து தலையில் தடவி குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு. மாதத்தில் 2 முறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு.