நார்த்தங்காயின் மருத்துவ நன்மைகள்
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு இது மருந்தாகிறது.

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. நாரத்தங்கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு இது மருந்தாகிறது.
நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.
முதிர்ந்த கனிகள் உடலின் வலுவேற்றும், ஊக்குவிக்கும், இதன் சாறு வாந்தியை நிறுத்தும். பசியைத் தூண்டும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் ஆகியவற்றை இது போக்கும்.
தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். நார்த்தம் பழத்தைக் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.