Home » மருத்துவம் & சுகாதாரம் » கபசுர குடிநீர் என்றால் என்ன?

கபசுர குடிநீர் என்றால் என்ன?

காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம்.

👤 Sivasankaran1 April 2020 3:46 PM GMT
கபசுர குடிநீர் என்றால் என்ன?
Share Post

அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு சொல்கிறது. சித்த மருத்துவத்தில் 64 வகையாக சுரம் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் குறிப்பிடப்படும் சிக்குன் குன்யா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது.

கபசுர குடிநீர் கொரோனா நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பன்றி காய்ச்சல் பரவி இருந்தபோது நோயாளிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதற்காக இதை கொடுத்து வந்தனர்.

கபசுர குடிநீரை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் என்னென்ன?

இச்சூரணத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், நெல்லிவேர், கற்பூரவல்லி, நிலவேம்பு, சிறுதேக்கு, ஆடாதொடை, சிறுகாஞ்சொறிவேர், வட்டதிருப்பி வேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம் ஆகிய 15 வகையான மூலிகை பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை பொடிசெய்து சமஅளவு சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை கொடுக்கலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.