Home » மருத்துவம் & சுகாதாரம் » உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் 'கோகோ'!

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் 'கோகோ'!

ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவக்கூடும்.

👤 Sivasankaran1 July 2020 2:53 PM GMT
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் கோகோ!
Share Post

இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

* ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது. கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.

* கோகோ பவுடரில் கேடசின் மற்றும் எபிகாடெசின் வடிவத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவக்கூடும்.

* கோகோவில் மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தும் உடல் இயக்க செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. தினமும் உடலுக்கு தேவைப்படும் இந்த தாதுக்களின் தேவையில் 3 முதல் 9 சதவீதத்தை ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூள் நிவர்த்தி செய்துவிடும். மெக்னீசியம், இதயத்தின் செயல்பாட்டை நிர்வகிக்க துணைபுரியும். எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை வளர்ச்சிதை மாற்றங்களுக்கு தூண்டவும் மாங்கனீஸ் உதவும். இரும்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். அதுபோல் துத்தநாகமும் புதிய ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்புசக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.