தயிர், மோர், பால் ஆகியவற்றை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்?
ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தில் இந்த மூன்றையும் உட்கொள்வதற்கான சரியான நேரம் குறித்து பார்ப்போம்.
பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். அதை விட இரவு நேரம்தான் நல்லது. காலையில் பால் குடித்தால் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நீடித்திருக்கும். முதியவர்கள் மதிய வேளையில் பால் பருகலாம். பால் ஜீரணமாவதற்கு தாமதமாகும் என்பதால் அதனுடன் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.
நண்பகலுக்கு முன்பாகத் தயிர் சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. தயிரைச் சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.
மோரை எந்த நேரத்திலும் பருகலாம். மதிய உணவு சாப்பிட்டதும் பருகுவது நல்லது. மாலை, இரவு வேளையில் மோர் பருகுவதாக இருந்தால் பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளுங்கள். வயிற்று பிரச்சினைஇருந்தால் காலையில் வெறும் வயிற்றில் மோர் பருகலாம்.