அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஏற்படும் ஆபத்து
சிலருக்கு பால் குடிப்பதால் சரும ஒவ்வாமை உண்டாகும்.
👤 Sivasankaran20 Sep 2020 12:03 PM GMT

அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும்.
வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
சிலருக்கு பால் குடிப்பதால் சரும ஒவ்வாமை உண்டாகும்.
பால் குடிப்பதால் எலும்புகள் உறுதியாகும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே சமையல் அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.
நாள் ஒன்றுக்கு 2 குவளைக்கு மேல் பால் குடித்தால் ஆண்களுக்கு இதயப் பாதிப்பு ஏற்படும் பிரச்சனையும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை சந்திப்பார்கள் என்றும் BMJ நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பால் அதிகமாக குடிப்பதைக் குறைத்து கொண்டு மாறாக தயிர், மோர், வெண்ணை, பாலாடைக்கட்டி, பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire