Home » மருத்துவம் & சுகாதாரம் » ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல

ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல

ஆப்பிள் தோலைப் பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

👤 Sivasankaran23 Oct 2020 6:18 AM GMT
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல
Share Post

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள்.

அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன.

அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிள் தோலைப் பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.