Home » மருத்துவம் & சுகாதாரம் » முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

தவிர்க்க முடியாமல் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் 7 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடவேண்டும்.

👤 Sivasankaran30 Oct 2020 7:55 AM GMT
முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
Share Post

முட்டையை வாங்கி அப்படியே குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நாள்கணக்காக வைத்திருந்தாலும் அதன் ஓட்டில் பாக்டீரியா இருந்தால் அழியாது. அதே நேரம் முட்டையின் உள்ளே பாக்டீரியா இருந்தால் முட்டையை அறைவெப்பநிலையில் வைத்திருந்தாலும் உள்ளிருக்கும் பாக்டீரியா அழியாது.

இதற்கு தீர்வு முட்டையை வாங்கியவுடன் முட்டையின் வெளிப்புறத்தை வெந்நீரில் கழுவி அறைவெப்பநிலையில் வைத்து 3 முதல் 4 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது என்றாலும் தவிர்க்க முடியாமல் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் 7 நாட்களுக்குள் அதை பயன்படுத்திவிடவேண்டும்.

குளிர்சாதனப்பெட்டியில் முட்டை என்றில்லாமல் எந்த பொருளையும் அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் அறிவுரையும் கூட.