Home » மருத்துவம் & சுகாதாரம் » இதயத்தின் நண்பன் பப்பாளி

இதயத்தின் நண்பன் பப்பாளி

இரவில் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது.

👤 Sivasankaran20 Nov 2020 3:05 PM GMT
இதயத்தின் நண்பன் பப்பாளி
Share Post

பப்பாளி கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும். பப்பாளி கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயதுடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கசாயம் சிறந்த பயன் அளிக்கும்.

பப்பாளி இலை கசாயம், நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை குறைத்து நிவாரணம் அளிக்கிறது . இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளி மிகச்சிறந்த உணவாகும். பப்பாளிபழம் ரத்தத்தில் கொலாஸ்டிராலின் அளவை குறைத்து ரத்தக் குழாய்களை நெகிழக்கூடியவையாக ஆக்குவதால் இதய நோயாளிகள் பப்பாளி பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப்பழம் சாப்பிடலாம். இரவில் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது.

நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதலில் 10 கிராம் வரை எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவிடவும். பின்னர் வடிகட்டி அந்த கசாயத்தை நோயாளிகளுக்கு குடிக்க கொடுக்கவும். இந்த சிகிச்சையினால் நோயாளிகள் உடல் வெப்ப நிலை தணியும். நாடித்துடிப்பின் வேகமும் குறையும்.