உண்ணும் நெய்யும் அதன் அளவும்!
ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம்.
👤 Sivasankaran31 Jan 2021 10:43 AM GMT

எந்தெந்த வயதினர் எவ்வளவு நெய் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
அதில், பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தின மும் 3 தேக்கரண்டி நெய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
7 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 3 தேக்கரண்டி வரை நெய்யை உணவில் சேர்த்துக்கொடுக்கலாம்.
இதையடுத்து, 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதே அளவில் வழங்கலாம். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு 4 தேக்கரண்டி நெய்யும் கொடுக்கலாம்.
6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெய் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire