மலேரியாவுக்கு சூப்பு வகைகள்
அவை மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
👤 Sivasankaran21 Feb 2021 6:35 AM GMT

வீட்டில் தயாரிக்கப்படும் சூப்பு, மலேரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப் பிடுகிறார்கள். இந்த ஆய்வை லண்டன் இம்பிரியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக உலகத்தின் பல பகுதிகளில் தயாரிக்கப்படும் சூப்பு வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவை மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐந்து விதமான சூப்பு வகைகளை பருகக் கொடுத்து பரிசோதித்தபோது மலேரியா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணியின் வளர்ச்சியை அவை 50 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டுப்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவற்றுள் இரு சூப்பு வகைகள் மலேரியா நோய் எதிர்ப்பு மருந்தான டீஹைட்ரோ ஆர்டிமிசினேனின் தாக்கத்தை கொண்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire