Home » மருத்துவம் & சுகாதாரம் » குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்

குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்

அனைத்து உணவுப் பொருட்களையுமே குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. ஒருசில உணவுகளை...

👤 Sivasankaran1 April 2021 6:15 AM GMT
குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்கள்
Share Post

அனைத்து உணவுப் பொருட்களையுமே குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. ஒருசில உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அது விஷத்தன்மையாகிவிடும்.

கீழே எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழங்களுக்கு அறை வெப்பநிலை இரண்டு காரணங்களுக்காக தேவைப்படுகிறது. வெதுவெதுப்பான வெப்பநிலையில் வாழைப்பழம் நன்கு வேகமாக பழுக்கும் மற்றும் ஒளி மற்றும் காற்று வாழைப்பழம் சிதைவதை மெதுவாக்குகிறது.

காபி

உலகில் ஏராளமானோர் விரும்பி பருகும் ஓர் பானம் தான் காபி. இந்த காபி பொடியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அது அதைச்சுற்றியுள்ள பிற சுவைகளை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே காபி பொடியை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.

தக்காளி

காய்கறிகளுள் தக்காளியை நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைப்போம். தக்காளியை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அதன் இயற்கை சுவை நீங்கி மாறிவிடும்.

தேன்

பொதுவாக தேன் கெட்டுப் போகாத ஒரு உணவுப் பொருள். இதை குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் இருப்பதே நல்லது. ஒருவேளை வைத்தால், அது தேனின் சுவையை விரும்பத்தகாததாக ஆக்கும். எனவே தேனை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதற்கு பதிலாக, ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி வையுங்கள்.

பிரட்

சாண்விட்ச் செய்ய நீங்கள் பிரட் வாங்கினால், உங்களுக்கு விருப்பமான சாண்விட்ச் செய்வதற்கு உலர்ந்த பிரட் துண்டுகளை விரும்பினால், அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை மென்மையான பிரட் துண்டுகள் தான் வேண்டுமெனில், அதை வெளியே வைத்திருங்கள்.

வெங்காயம்

வெங்காயத்தை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சேமிக்கக்கூடாது. வெங்காயம் நல்ல காற்றோட்டமான பகுதியில் இருந்தால் தான், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் நற்பதமாக இருக்கும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், விரைவில் கெட்டுப்போய்விடும்.

பூண்டு

பூண்டும் வெங்காயத்தைப் போல் அறைவெப்பநிலையில், நல்ல காற்றோட்டமான பகுதியில் இருந்தால் தான் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எனவே நீங்கள் வாங்கிய பூண்டு நீண்ட நாட்கள் வரவேண்டுமானால், அவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது.