Home » மருத்துவம் & சுகாதாரம் » வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. வாழை இலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்...

👤 Sivasankaran10 April 2021 6:58 AM GMT
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Share Post

வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

வாழை இலையில் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் நம்மை வைக்கின்றது.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.

உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு சிறப்பான சுவையும் மணமும் உண்டு.

வாழையிலையின் மேல் உள்ள பச்சையம் (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. இது நன்கு பசியைத் தூண்டும்.

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.