Home » மருத்துவம் & சுகாதாரம் » உடல் சூட்டை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகள்!

உடல் சூட்டை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகள்!

உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது...

👤 Sivasankaran10 May 2021 9:30 AM GMT
உடல் சூட்டை குறைக்க உதவும் இயற்கை வழிமுறைகள்!
Share Post

உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப ¾ அல்லது 1 அல்லது 1 ½ லிட்டர் அளவு தண்ணீர் கொடுக்கலாம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் கால், பாதம் நனையும்படி 15 நிமிடங்கள் வைத்திருந்தாலும் ஓரளவுக்கு வெப்பநிலை குறையும்.

வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும்.

புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சியாகும்.

உடலின் வெப்பம், வெளி காரணங்களால் ஏற்படும் சூடு ஆகியவற்றைப் போக்க விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, கிவி உணவுகள் உதவும்.

கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது.

தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும்.

தினமும் ஒரு யோகர்ட் வாங்கி சாப்பிடலாம். இதனாலும் உடல் குளிர்ச்சியாகும். அனைவருக்கும் ஏற்றது.

சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும். அனைவருக்கும் ஏற்றது.

பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அன்றும் ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு வரவே வராது. பெரியவர்கள் அவசியம் செய்ய வேண்டும்.