Home » மருத்துவம் & சுகாதாரம் » புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆரஞ்சு பழம்!

புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆரஞ்சு பழம்!

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

👤 Sivasankaran20 May 2021 10:37 AM GMT
புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆரஞ்சு பழம்!
Share Post

ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.