Home » மருத்துவம் & சுகாதாரம் » கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறைகள்

கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறைகள்

மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும்.

👤 Sivasankaran10 Jun 2021 6:45 AM GMT
கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறைகள்
Share Post

முகத்தில் அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கச் சில எளிய வீட்டுக் குறிப்புகள் உண்டு.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் கரும்புள்ளி மறைந்து சருமம் பளபளக்கும்.

மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி, கரும்புள்ளி இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.

அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவவும். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சீக்கிரமே கருமை மறையும்.

2 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசவும். பிறகு15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்ய வேண்டும்.