ஆக்சிஜன் அளவு குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம்.

வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.
ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும்.
தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம்.
உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:
சுவாசிப்பதில் சிரமம்: ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவர் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மார்பு வலி: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும்.
மனக்குழப்பம்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
நீல நிற உதடு: உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும்.