ஜீரண சக்தியைத் தூண்டும் இஞ்சி சட்டினி
இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
👤 Sivasankaran1 July 2021 2:14 PM GMT

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, இஞ்சி, பூண்டு (20 பல்), 10 காய்ந்த மிளகாய், பெரிய நெல்லிக்காய் அளவு புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனை ஆற வைத்து தேவைக்கேற்ப உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி... கால் தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது சத்தான இஞ்சிச் சட்டினி தயார். இதை பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இஞ்சிச் சட்டினி ஜீரண சக்தியைத் தூண்டும். இதனால் பசியின்மை, மந்தம், வயிற்றுப் பொருமல் தீரும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire