இரவு தூக்கமும் காலைச் சோர்வும்
மன அழுத்தம் கொண்டவர்கள் இரவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.
👤 Sivasankaran25 July 2021 9:00 AM GMT

இரவில் நன்றாக தூங்கினாலும் காலையில் எழும்போது சோர்வையும், களைப்பையும் உணர்ந்தால் அதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அது ஆரோக்கியத்தில் ஏதோ குறை இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
மன அழுத்தம் கொண்டவர்கள் இரவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.
பகல் பொழுதில் தூக்க கலக்கத்தால் அவதிப்படுவார்கள். அதோடு மனச்சோர்வு அடைந்தவர்கள் தூக்கம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.
தூங்குவதற்கு முன்பு இரவில் அதிக நேரம் அலைபேசியைப் பார்ப்பதும் தூக்கத்திற்கு கேடு விளைவித்துவிடும். காலையில் சோர்வை உண்டாக்கிவிடும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்து, சோர்வை நீக்கலாம்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire