Home » மருத்துவம் & சுகாதாரம் » புத்துணர்ச்சி தரும் குளுகுளு நுங்கு இளநீர்ச் சாறு

புத்துணர்ச்சி தரும் குளுகுளு நுங்கு இளநீர்ச் சாறு

உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது.

👤 Sivasankaran1 Aug 2021 5:00 AM GMT
புத்துணர்ச்சி தரும் குளுகுளு நுங்கு இளநீர்ச் சாறு
Share Post

புத்துணர்ச்சி தரும் நுங்கு இளநீர்ச் சாறு வழக்கமான பானங்களிலிருந்து வேறுபட்டது.

உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது.


தேவையான பொருட்கள்

நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது - 1

இளநீர் - 1/2 கோப்பை

வெல்லம் பொடித்தது - 2 டீஸ்பூன்

இளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.

செய்முறை

மிக்சி பிளெண்டரில் நறுக்கிய நுங்கு, இளநீர், வெல்லம், இளநீர் வழுக்கையை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த ஜூஸை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்த பிறகு அதை ஒரு கண்ணாடிக் குவலையில் ஊற்றி மேலே சில நுங்கு துண்டுகளை போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குளுகுளு நுங்கு இளநீர்ச் சாறு தயார்.