குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்
சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது.
சளி, இருமல்
காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.
காய்ச்சல்
இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.
வயிற்றுப் போக்கு
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும்.