இதயப் பாதிப்பை தடுக்கும் திராட்சை
இரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
👤 Sivasankaran24 Oct 2021 12:57 PM GMT

இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சை பழத்துக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.
குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்த குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது,
இரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire