Home » மருத்துவம் & சுகாதாரம் » மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோகிக்கக்கூடாது.

👤 Sivasankaran1 Nov 2021 3:24 PM GMT
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
Share Post

மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம். எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோகிக்கக்கூடாது.

மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.