Home » மருத்துவம் & சுகாதாரம் » வறுத்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்

வறுத்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்

வறுத்த பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை...

👤 Sivasankaran1 March 2022 10:37 AM GMT
வறுத்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்
Share Post

வறுத்த பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும். இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூர விரட்டி விடலாம்.

வறுத்த பூண்டை சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும். அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்.

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.

7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.