பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம்
ஆசிய நாடுகளுக்கான சுகாதார அமைப்பு இளம் பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு உணடாவது குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது,
👤 Saravana Rajendran5 Feb 2018 4:42 PM GMT

பொதுவாக, பரம்பரை மரபணுக் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு நிகழக்கூடும் என்ற கருத்து நிலவி வந்தது. அதுவும் ஒரு காரணம் தான். பரம்பரை வழியாக, இதற்கு முன் தாய்க்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகியிருந்தால், அவர்களுடைய மகளுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும், ஆனால் தற்போது முன்னேறிய மருத்துவ முறையால் அது தடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கருச்சிதைவுக்கு அதுமட்டுமே காணம் என சொல்லிவிட முடியாது. கருச்சிதைவுக்கு முற்றிலும் தாய்மீது பலியை போட்டுவிட முடியாது.
இதுதவிர வேறு சில காரணங்களாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. அவை: நோய்த்தொற்று, கர்ப்பிணித் தாய்க்கு இருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, தைராய்டு பிரச்னை, நாளச்சுரப்பி எனப்படும் ஹார்மோன் கோளாறுகள், நோய் எதிர்ப்புத்தன்மை குறைபாடுகள், தாயின் பிற உடலியல் சார்ந்த பிரச்னைகள், சிறுநீர்ப்பை கோளாறுகள் ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.
இது தவிர, 35 வயதை கடந்த கர்ப்பிணிகள் நீரிழிவு, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மூன்று முறை அல்லது அதற்கு மேல் கருச்சிதைவுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
வலுவற்ற கர்ப்பப்பையினால் கருவை தாங்க முடியாது போகலாம். இந்தப் பிரச்னை உடையவர்களுக்கு பெரும்பாலும் 4-6 மாத காலத்தில் கருச்சிதைவு நிகழ வாய்ப்பு உண்டு. வலுவிழந்த கர்ப்பப்பை உள்ள கர்ப்பிணிகளுக்கு உடலில் திடீரென ஓர் அழுத்தம் உண்டாகி பனிக்குடம் உடைந்து கருச்சிதைவு நிகழக்கூடும். இதுபோன்ற பிரச்னையை சந்தித்த தாய்மார்களுக்கு அவர்கள் மீண்டும் கருவுறும்நிலையில் கர்ப்பப்பையின் வாயை தையல் மூலம் மகப்பேறு நல மருத்துவர் மூடிவிடுவர்.
இதனால் கர்ப்பப்பையில் இருக்கும் கரு பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக கருவுற்ற 3 மாதத்துக்குப் பிறகே இந்த நடைமுறையை மருத்துவர்கள் மேற்கொள்வர் பிரசவ நேரத்தில் அந்தத் தையலை மருத்துவர்கள் பிரித்து பிரசவம் பார்ப்பார்கள். வருமுன் காப்போம் என்று சொல்வது போல கருச்சிதைவு அறிகுறிகளை தாய்மார்கள் அறிந்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் குழந்தைப் பேறு சுகப்பிரசவத்திலேயே முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து ஆகும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire