Home » மருத்துவம் & சுகாதாரம் » எதிர்கால இந்தியாவோடு விளையாடும் அரசு, நொறுக்குத்தீனி விளம்பரங்களுக்கு தடையில்லை.
எதிர்கால இந்தியாவோடு விளையாடும் அரசு, நொறுக்குத்தீனி விளம்பரங்களுக்கு தடையில்லை.
தொலைக்காட்சியில் வரும் நொறுக்கு தீனி விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக்கு அக்கரையில்லை, அத்தகைய விளம்பரங்களை தடைசெய்யமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
👤 Saravana Rajendran9 Feb 2018 10:07 AM GMT

நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின் போது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரிடம் நெறுக்குத்தீனி விளம்பரங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இளையவர்கள் தொலைக்காட்சியில் விளம்பரங்களாக காணிபிக்கப்படும் நொறுக்குத்தீனிகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நொறுக்குத்தீனி தயாரிப்பு நிறுவனங்கள் விதிமுறைகளைப் புறக்கணித்து காரம் மற்றும் இனிப்புச்சுவைக்கு வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றன. ஆகவே இத்தகைய விளம்பரங்களை தடைசெய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விடுத்திருந்த கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும் நொறுக்குத்தீனியில் உள்ள உணவுப் பொருளில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு, ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது, அந்தக் குழு நொறுக்குத்தீனியினால் பாதிப்பு ஏற்படுவது உண்மைதான், உலகம் முழுவதும் நொறுக்குத்தீனிக்கு எதிராக குரலெழும்பிவருகிறது, அய்ரொப்பாவில் உள்ள பல நாடுகள் இதற்கு தடைவிதித்துள்ளன என்றும் நொறுக்குத்தீனி விளம்பரங்கள் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் வருவதை தடைசெய்யலாம் என்று பரிந்துரை செய்தனர்.
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி "இந்திய அரசு நொறுக்குத்தீனி விளம்பரத் தடை குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. தடைவிதிக்கும் எண்ணமும் இல்லை என்று ஒரே வரியில் கூறி முடித்துவிட்டார்.
இதனால் இந்திய இளையதலைமுறைகள் உடல் பருமன், பற்சிதைவு, தசை தளர்வு நோய்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்திவிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire