பக்கவிளைவுகளுக்கு அஞ்சி மருந்துகளைத் தவிர்க்கும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் எலும்புத்தேய்மானம் உள்ள நபர்கள் சோதனைக்குச் சென்றால் மருந்துகளைக் கொடுத்து உட்கொள்ளச்சொல்வார்கள் என்ற காரணத்தால் மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்கின்றனர்.
👤 Saravana Rajendran19 Feb 2018 9:09 AM GMT

எலும்புத்தேய்மானம் அமெரிக்காவில் மிகவும் பிரச்சினை தரக்கூடியநோயாக உள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது, சமீபகாலமாக இந்த சிறப்பு முகாம்களுக்கு சோதனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகிறது. அமெரிக்க மக்கள் தொகையில் 50 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் எலும்பு தேய்மான நோய்கள் குறித்து சோதனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது,
இது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்து சுகாதாரத்துறை கூறியதாவது, "எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும், ஆனால் முகாமில் கொடுக்கப்படும் மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை பொதுவாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை, மேலும் மருந்துகளை உட்கொள்வதையும் தவிர்க்கின்றனர்.
நாங்கள் கொடுக்கும் மருந்துகளால் உடல் பருமன், சரும எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் வரும் என்ற வதந்தி காரணமாக முகாமிற்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால், எலும்புத் தேய்மான நோய் உள்ளோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விடும். எலும்புகளுக்கு வலுவூட்டும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, இது குறித்துநாங்கள் ஆலோசனைகளைக் கூறிவருகிறோம். முக்கியமாக வைட்டமின் மற்றும் கால்சியம் போன்றவைகள் அடங்கிய உணவுவை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் மக்கள் சோம்பேறித்தனமாக இருந்து கொண்டு முகாம்களை நாடுவதை தவிர்க்கின்றனர். இப்படிச் செய்வது அவர்களை நிரந்தரமாக சக்கரநாற்காலியில் அமரவைத்துவிடும் என்று கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire