புனித தலமான திருவண்ணாமலையில் சட்டவிரோத ஸ்கேன் மையங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று ஸ்கேன் மையங்களில் சட்டவிரோத பாலியல் கண்டறியும் சோதனை நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
👤 Saravana Rajendran23 Feb 2018 9:49 AM GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஸ்கேன் மையங்களில் கரு கலைப்பு செய்யப்படுவதாகவும், குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து சொல்வதாகவும் புகார்கள் வந்தது. இதனால் மத்திய சுகாதாரத்துறை சார்பு செயலாளர் அஜய் குமார் தலைமையில் அங்கு ஆய்வு செய்யப்பட்டது.
அங்கு உள்ள பல்வேறு ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூன்று ஸ்கேன் மையம் மற்றும் புவனேஸ்வரி என்ற மருத்துவமனையை சீல் வைத்தனர். செல்வாம்பாள் என்ற மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆய்வு தொடங்கி இருக்கிறது. தற்போது அங்கு இருக்கும் மூன்று ஸ்கேன் மையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லியிலிருந்து வந்த மத்திய குழு இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக கருகலைப்பு நடந்தேறி வருகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire