கோடை காலம் வந்துவிட்டது தண்ணீர் மிகவும் அவசியம்.
தண்ணீர் அருந்துவதன் அவசியத்தை அறிந்திருந்தாலும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் அதைக் குடிக்க...
👤 Saravana Rajendran17 March 2018 3:19 AM GMT

தண்ணீர் அருந்துவதன் அவசியத்தை அறிந்திருந்தாலும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் அதைக் குடிக்க மறந்துவிடுவது வழக்கமானது.
தண்ணீர் குடிப்பதைப் பழக்கிக்கொள்ள சில அறிவுரைகள்
தண்ணீரை அவ்வப்போது பருக வேண்டும் என்பதை நினைவூட்டும் செயலிகள் உள்ளன. அவற்றைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 'தண்ணீர் குடிக்கவேண்டும்!' என்ற அறிவிப்புகளின் மூலம், செயலி அவ்வப்போது நினைவூட்டும்.
ஒரு நாளில் தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கலாம் என்பதை தண்ணீர் பாட்டிலில் குறித்துக்கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். பாட்டிலில் இருக்கும் இந்த அடையாளக் குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் தண்ணீரைக் குடிக்க மறக்கமாட்டீர்கள்!
மிதமாக இயற்கை காரம்(மிளகாய், மிளகு) கலந்த உணவுகளை உண்ணுங்கள். அவ்வாறு சாப்பிடும்போது காரத்தைத் தணிக்க தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே ஏற்படும்.
குளிர்பானங்கள், கார்பனேட் பானங்களை அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதே மாதிரி, சர்க்கரை அளவு அதிகமுள்ள பானங்களையும் குறைந்த அளவில் பருகலாம். அதற்குப் பதிலாக, தண்ணீரைக் குடியுங்கள்.
புதினா, எலுமிச்சைப்பழத் துண்டு, தர்ப்பூசணிப்பழத் துண்டு, வெள்ளரிக்காய் துண்டு ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் அருந்தும் பழக்கம் மேலும் சுவையுள்ளதாக இருக்கும்.
சந்தையில் உங்கள் மனதுக்குப் பிடித்த வடிவ தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொள்ளுங்கள், அது உங்களை தண்ணீர் அருந்த தூண்டும் ஒரு காரணியாக இருக்கும்.
தாகம் என்று சொல்லி மிகுந்த குளிர் உள்ள தண்ணீரை அருந்த வேண்டாம், அறைவெப்பநிலையில் உள்ள தண்ணீரே தாகம் தணிக்க போதுமானது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire