சிகிச்சைக்கு வந்த பெண்களை கருவுறச்செய்த மருத்துவர்
தனது மற்றும் தனது உறவினர்களின் விந்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்குவந்த பெண்களை கருவுறச்செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.
👤 Saravana Rajendran8 April 2018 1:56 AM GMT

மேலை நாடுகளில் விருப்பமான கருவுருதல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது, அந்த நிலையில் கணவன்-காதலன் உயிரணுவை சேகரித்துவைத்து, தேவைப்படும் போது மருத்துவர்களின் உதவியுடன் கருப்பையில் செலுத்து கருவுறும் வழக்கம் அங்கு சாதாரனமாக உள்ளது.
கனடா நாட்டில் உள்ள மருத்துவமனையில் செயற்கை கருவுறுதல் தொடர்பான சிகிச்சைக்குச் சென்ற பெண்களுக்கு அவர்களின் கணவர்-காதலன் உயிரணுவிற்கு பதிலாக தனது மற்றும் தனது நெருங்கிய உறவினர்களின் விந்தணுவை செலுத்தி கருவுறச்செய்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த டாக்டர் நோர்மன் பார்வின் என்பவர் தன்னிடம் செயற்கை கருவுற வந்த பெண்களுக்கு தனது மற்றும் தனது உறவினர்களின் உயிரணுவைப் பயன்படுத்தி பெண்களைக் கருவுறுச் செய்திருக்கிறார்.
மருத்துவரிடம் சிகிச்சை பெறவந்த முன்னாள் பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் தனது குழந்தையின் மரபணுவை பரிசோதனை செய்துள்ளார். அப்போது அந்தக் குழந்தையின் மரபணு மருத்துவரின் மரபணுவும் ஒன்றுதான் என்பது தெரியவந்தது.
இந்த சோதனைக்குப் பிறகு பலர் அந்த மருத்துவரின் மரபணுவை தனது பெண்கள் தங்களுக்கு தவறான உயிரணுவை செலுத்தியுள்ளதாக புகார் கூறியுள்ளனர். மேலும் 16 பேர் தங்களது தந்தையின் மரபணுவும் தங்களது மரபணுவும் வேறுபடுகிறன என்று கூறியுள்ளனர். இதனால் மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire