குளிர்பானங்களைத் தூக்கி வீசுங்கள் வாழைப்பழம் சாப்பிடுங்கள்
விளையாட்டு வீரர்களின் ஆற்றல் இழப்பை உடனடியாக ஈடுகட்ட குளிர்பானங்களை விட வாழைப்பழம் நல்ல ஒரு ஆற்றல் ஊக்கியாக உள்ளது, விளையாட்டுவீரர்களுக்காக பரிந்துறைக்கும் கார்பன் ஏற்றிய குளிபானங்களை விட(சோடா, எனர்ஜி டிரிங்) வாழைப்பழம் நல்ல ஊக்கமிக்க உணவாக திகழ்கிறது,
👤 Saravana Rajendran8 April 2018 11:08 PM GMT

வாழைப்பழத்தில் ஆற்றல் தரும் ஊக்கப் பொருட்கள் சரிவிகிதத்தில் உள்ளது, மற்ற குளிர்பானங்களை விட அதிக பலன் தரும் இயற்கை ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது
நீண்ட நாட்களாகவே உடற்பயிற்சியாளர்கள் மற்றும் ஓட்டப்பந்தயம் போன்ற அதலடிக் விளையாட்டு வீரர்கள் கார்பனேற்றப்பட்ட உடற்பயிற்சியாளர்களுக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட பானமே உடனடியாக ஆற்றலை மீட்டுத்தரும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கார்பனேற்றப்பட்ட குளிர்பானம் உடலுக்கு ஆற்றலை உடனடியாக தருவது உண்மைதான், ஆனால் இது ஒரு செயற்கை ஆற்றலூக்கி ஆகவே இதனால் ஏற்படும் ஆற்றல் ஏற்றம் உடனடியாக குறைந்துவிடும். எவ்வளவு விரைவாக இது ஆற்றலைத்தருகிறதோ அதே போல் அதிக நேரத்தில் ஆற்றலை குறைத்துவிடும் தன்மை வாய்ந்தது.
விரைவான ஆற்றலேற்றம் அதே நேரத்தில் விரைவில் உடல் வலுஇழப்பு போன்ற காரணத்தால் சில பாதிப்புகள் ஏற்படுகிறது விளையாட்டு வீரர்களுக்கான குளிர்பானங்களில் சர்க்கரை, குளுகோஸ், சுக்ரோஸ் போன்றவை உள்ளது இது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் இந்த குளிர்பானங்கள் வேதிப்பொருள் கலந்தவைகள் மேலும் செயற்கை வண்ணம், மற்றும் சுவை சேர்க்கப்பட்டவைகள் ஆகும், ஆகவே சிலர் இதனை வெறுக்கின்றனர். இதற்கு மாற்று என்ன என்று ஆய்வு செய்ய கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து கன்னபொலிஸ்சில் உள்ள அப்பலசியான் மாகான பல்கலைக்கழகமும் வடக்கு கரோலினா ஆய்வு மையம் மருத்துவ ஆய்வுமையமும் இணைத்து பல உணவுப் பொருட்களை வைத்து ஆய்வு நடத்தியது.
முக்கியமாக வாழைப்பழத்தில் புருக்டோஸ் என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை உள்ளது. குளுக்கோஸ், காலக்டோஸ் ஆகியவற்றைப்போல் புருக்டோஸும் எளிதில் கரையக்கூடிய சர்க்கரை ஆகும். மேலும் இது உடலில் விரைவில் கலந்துவிடுகிறது, ஆகையால் அதலடிக் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்கு மிகவும் எளிதான ஒரு உணவாகவும் ஆற்றலை உடனடியாக தரக்கூடியதாக உள்ளது கண்டறியப்பட்டது,
இந்த ஒற்றைச்சர்க்கரை குறித்தும் தாவரங்களில் குறிப்பாக இனிப்புப் பழங்களில் புருக்டோஸ் இருப்பது குறித்த்து 2012-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில் உறுதிசெய்யப்பட்டது, இருப்பினும் இது உடலில் உடனடியாக சேரும் வகையில் எந்த பழத்தில் உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தனர். முக்கியமாக சைக்கிள் பந்தய வீரர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு சாரருக்கு விளையாட்டு வீரர்களுக்கு பரிந்துறை செய்த குளிர்பானமும் , மற்றோரு சாரருக்கு வாழைப்பழமும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இருப்பினும் ஆரம்ப கட்டங்களில் இந்த ஆய்வில் எந்த ஒரு விடையும் தெரியவில்லை, ஆய்வாளர்களுக்கு வாழைப்பழம் உண்ட விளையாட்டு வீரர்கள் செயல்பாடுகள் குறித்து நீண்ட அய்யப்பாடுகள் நிலவியது.
இந்த அய்யப்பாடுகளை கேள்விகளாக மாற்றி அதற்கான விடைகளைக் கண்டுபிடித்தனர். 2018-ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் வெளியான பிஎல்ஓஎஸ் மருத்துவ இதழில் இதன் ஆய்வு முடிவுகள் வெளியானது. அதன் படி சைக்கிள் வீரர்களில் வாழைப்பழம் சாப்பிடும் வீரர்கள், நிறுவனங்களால் பரிந்துரை செய்யபப்டும் ஆற்றல் ஊக்கி குளிர்பானங்களை குடிக்கும் வீரர்களை விட அதிக திறமையாக செயல்படுவது கண்டறியப்பட்டது, மேலும் வாழைப்பழம் சாப்பிடும் சைக்கள் பந்த வீரர்களின் தசைகள் ஆற்றலைப் பெற்று நீண்ட நேரம் அதை உடலுக்குள் வைத்து ஆற்றல் இழைப்பை ஈடுகட்டுகிறது, என கண்டறியப்பட்டுள்ளது.
20 இருபாலின சைக்கிள் வீரர்கள் இந்த ஆய்விற்கு எடுத்துகொள்ளப்பட்டனர். இவர்கள் குளிர்மிகுந்த ஆர்டிக் வளைய நாடுகள் அதிக கோடை உள்ள சகாரா பாலைவன நாடுகள் தொடர்ந்து மழை பெய்துகொண்டு இருக்கும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் கடுமையான வரட்சிகொண்ட பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்குச் சென்று சைக்கிள் ஓட்டி ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் ஆய்வகத்தில் அனைத்து வசதிகளும் உள்ள இடங்களிலும் சைக்கிளை ஓட்டி அவர்களை தொடர்ந்து ஆய்வுசெய்துவந்தனர். மேலும் வாழைப்பழம் சாப்பிடும் வீரர்களுக்கு தொடர்ந்து வாழைப்பழத்துடன் தண்ணீர் மட்டுமே சைக்கிள் ஓட்டும் போது வழங்கப்பட்டது, மேலும் ஒவ்வோரு அரை நிமிடங்களுக்கும் பாதி வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. இவர்கள் 30 நிமிடங்களுக்கும் மேலான எந்த ஒரு சோர்வுமின்றி சைக்களை ஓட்டினர். ஆனால் ஊட்டச்சத்து குளிர்பானம் வழங்கியவர்களில் ஆற்றல் உடனடியாக கரைந்து போவதுடன், அவர்கள் 18 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் இவர்களின் ரத்த மாதிரிகளை ஒவ்வோரு 45 மணி நேர இடைவெளியில் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ரத்த அணுக்கள் வாழைப்பழம் உண்பவரை விட ஊட்டச்சத்து குளிபானம் அருந்துபவர்களின் ரத்த அணுக்கள் மிகவும் அதிக அளவு ஆக்ஸிஜனை அதிக அளவு அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது,
இதன் மூலம் வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் தசை நார்கள் நீண்ட நேரம் ஆற்றலை தங்களுக்குள் சேமித்துவைத்திருக்கிறது என்பது தெரியவந்தது.
வாழைப்பழத்திற்கு அடுத்தபடியாக பேரீச்சம் பழங்களில் இந்த ஆற்றல் சத்துக்கள் அதிக உள்ளது, என்றும் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அது கரையும் தன்மையில் வாழைப்பழங்களை விட சில மைக்ரோ வினாடிகள் அதிகம் எடுத்துக் கொள்கிறது, மேலும் அதை மென்று சாப்பிடும் வகையில் உள்ளதால் பேரிச்சம் பழம் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளப்பட்டது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire