இரவில் தூக்கம் வராமல் அதிகம் நேரம் விழிப்பவர்களுக்கு எச்சரிக்கை
இரவில் தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பவர்களும் காலையில் எழ முடியாமல் அவதிப்படுவோரும் இளம் வயதிலேயே மரணமடைய அதிக வாய்ப்பு உண்டு என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
👤 Saravana Rajendran14 April 2018 2:32 PM GMT

பிரிட்டனைச் சேர்ந்த 430,000 க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஆய்வில் இரவில் தூங்காமல் விழித்திருப்போர் சீக்கிரமாகவே மரணமடைய 10 விழுக்காடு அபாயம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
தூக்கம் வராமல் இருந்தாலோ அல்லது இரவு அதிக நேரம் விழித்து இருந்தாலோ அதை சாதாரனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இரவில் தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பவர்களை ஆந்தைகளுக்கு ஒப்பானவர்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தகையோர், மனநலப் பிரச்சனைகள், நீரிழிவு, வயிற்று வலி, சுவாசப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு ஆளாகலாம் என்று கருதப்படுகிறது.
இரவில் தூங்காமல் இருப்போரே, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, அளவுக்கு அதிகமாக காப்பி குடிக்கும் பழக்கங்களையும் கொண்டவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்தது. மனஅழுத்தம், தவறான நேரங்களில் உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாதது, சரியான தூக்கம் இல்லாத இவையே 'ஆந்தைகள்' உருவாகக் காரணமாகின்றன. ஒருவருக்கு காலை 8 மணி அளவில் வேலைக்குச் செல்வது கடினமான செயலாக இருக்கக்கூடாது. அவ்வாறு, சிரமப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உடல் நலனை உடனடியாக பேணிக்காக்க முற்படவேண்டும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire