பள்ளிக் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் உளவியல் பிரச்சினையால் பாதித்துள்ளனர்
குழந்தைகளுக்கு நேரிடும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பயிலரங்கம் சென்னையில் புத்தி கிளினிக்...
குழந்தைகளுக்கு நேரிடும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பயிலரங்கம் சென்னையில் புத்தி கிளினிக் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்றது.
இப்பயிலரங்கில் பல்வேறு தலைப்புகளில் மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர். முன்னதாக பயிலரங்கைத் தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆட்டிசம் தொடர்பான நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
முன்னதாக புத்தி கிளினிக் நிறுவனரும் பிரபல நரம்பியல் துறை மனோதத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி பேசுகையில்:
பள்ளிக் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் உளவியல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.
குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பதும் சுறுசுறுப்பாக செயல்படாததும் சாதாரணமான ஒன்று என எண்ணுகிறார்கள். அது தவறு. அப்பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம் என்று கூறினார்.
அமெரிக்க நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜே.சய்பேக்கர், குழந்தைகள் உளவியல் நிபுணர் டாக்டர் பிரமித்ரஸ் தோகி, குழந்தைகள் டெலி நெட்வொர்க் இயக்குநர் ஜோய்ஸ் ஹாரிசன், காயத்திரி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் இந்த பயிலரங்கில் உரையாற்றினர்.