Home » மருத்துவம் & சுகாதாரம் » இந்தியாவில் ஆயிரத்திற்கு 25 குழந்தைகள் பிறந்த உடனே மரணிக்கின்றன-யுனிசெப்

இந்தியாவில் ஆயிரத்திற்கு 25 குழந்தைகள் பிறந்த உடனே மரணிக்கின்றன-யுனிசெப்

குழந்தைகள் பிறப்பு மரணம் குறித்த பட்டியலை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது, இப்பட்டியலில் இந்தியா 12-ஆவது இடத்தில் உள்ளது

👤 Saravana Rajendran21 Feb 2018 9:09 AM GMT
இந்தியாவில் ஆயிரத்திற்கு 25 குழந்தைகள் பிறந்த உடனே மரணிக்கின்றன-யுனிசெப்
Share Post

பிறந்து 28 நாட்களுக்குள் மரணமடையும் குழந்தைகள் விகிதத்தை, நாடுகள் வாரியாக யூனிசெப் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலின் படி நடுத்தர மற்றும் ஏழைகுடும்பங்களில் அதிக குழந்தை மரணங்கள் ஏற்படுகிறது என்றும், குழந்தை மரணம் தொடர்பான நாடுகள் பட்டியலில் இந்தியா 12 வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 25 குழந்தைகள் மரணிக்கின்றன.
உலகிலேயே பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்து நிறைந்த நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. 2016ஆம் வருட ஆய்வுப்படி இங்கு ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 47 குழந்தைகள் சராசரியாக மரணிக்கின்றன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவற்றிலும் பாகிஸ்தானைப் போன்ற நிலையே உள்ளது.
பாதுகாப்பாக குழந்தைகள் பிறக்கும் மற்றும் வளரும் நாடுகளில் ஜப்பான், ஐஸ்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.ஆண்டுதோறும் உலகில் 26 லட்சம் குழந்தைகள், பிறந்த சில நாட்களில் மரணிக்கின்றன.
இந்த மரணங்கள் அனைத்தும் எளிதில் தவிர்க்கக்கூடிய நிலையில் இருந்தும் நிகழ்கின்றன என்று யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. முறையான மருத்துவ வசதியில்லாமை, நிமோனியா மாதிரியான தொற்றுநோய்கள், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றால் மரணங்கள் நிகழ்கின்றன என்றும், இவற்றை சுலபமாக தடுக்க இயலும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.