Home » மருத்துவம் & சுகாதாரம் » 10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

கடந்த காலங்களில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது.

👤 Sivasankaran10 Nov 2020 7:22 AM GMT
10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு
Share Post

ராயப்பேட்டை மருத்துவமனையின் கதிரியக்கத் துறைத் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சரவணன் கூறியதாவது:

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆண்டுதோறும், 1,200 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், 300 பேர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த காலங்களில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக இளம் வயதினர் பலர் அத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 10 வயதுக்குள் பூப்படைவதும், மரபணு ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதும் கூட இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் வர காரணமாக அமையலாம்.

அதுமட்டுமல்லாது சரிவர தாய்ப்பால் வழங்காததும், உடல் பருமனைக் குறைக்காததும் முக்கியக் காரணங்களாக உள்ளன. ஆரம்ப நிலை பரிசோதனைகள் வாயிலாக மட்டுமே மார்பகப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.