Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » சீன விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

சீன விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

சீன விண்வெளி ஆய்வு மையம், நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர்...

👤 Sivasankaran3 Jan 2019 11:34 AM GMT
சீன விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது
Share Post

சீன விண்வெளி ஆய்வு மையம், நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சாங் இ (Chang'e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது 'சாங் இ 4 மிஷன்' (Chang'e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. அதன்படி, பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ரோபோ உள்ளடங்கிய விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.

சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் இன்று காலை நிலவின் மறுபக்கத்தில் உள்ள கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவு ஆய்வு பயணத்தில் சீனா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் இதுதான்.