Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » விரைவில் வெளி வர இருக்கிறது டாடா ஹேரியர் கார்

விரைவில் வெளி வர இருக்கிறது டாடா ஹேரியர் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விரைவில் இந்தியாவில் வெளி வர இருக்கிறது.

👤 Sivasankaran7 Jan 2019 10:05 AM GMT
விரைவில் வெளி வர இருக்கிறது டாடா ஹேரியர் கார்
Share Post

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விரைவில் இந்தியாவில் வெளி வர இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.

புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.