Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி

கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி

பிடித்தமான லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கண்ணாடியில் பார்த்தே வாங்குவது வழக்கம்.

👤 Sivasankaran7 July 2020 3:45 PM GMT
கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி
Share Post

தென்கொரியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளின் உபயோகத்திற்கான புனை மெய்மை என்று சொல்லப்படும் ஆக்மெண்டேட் ரியாலிட்டி கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருட்களை வாங்கச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கண்ணாடியில் பார்த்தே வாங்குவது வழக்கம்.

அந்த நிறம் தங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதனை உபயோகித்துப் பார்த்து வாங்கிய காலம் கொரோனாவால் மலையேறி விட்டது. இதனால் பெண்களுக்கு உதவும் வகையில் புதிய மென்பொருள் தென்கொரியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.