Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » உங்கள் கைகளில் தவழவிருக்கும் சாம்சங் கருவிகளின் பட்டியல்

உங்கள் கைகளில் தவழவிருக்கும் சாம்சங் கருவிகளின் பட்டியல்

மேற்குலக நாடுகளில் அலைபேசியின் ஜாம்பவான் அய்போன் என்றால் ஆசிய மற்றும் இதர கிழக்குலக நாடுகளில் அலைபேசி ஜான்பவான் சான்சுங் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகும்.

👤 Saravana Rajendran6 Feb 2018 1:23 AM GMT
உங்கள் கைகளில் தவழவிருக்கும்  சாம்சங் கருவிகளின் பட்டியல்
Share Post

உங்கள் கைகளில் தவழவிருக்கும் சாம்சங் கருவிகளின் பட்டியல்
இந்த ஆண்டு அதவது 2018-ல் சந்தையில் வரவிருக்கும் சாம்சங் தயாரிப்பு வரிசையை விட பெரிய வர்த்தகம் உலகில் எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தினாலும் வழங்க முடியாது. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சாம்சங் 20 ஸ்மார்ட்போன்களை தொடங்குகிறது.
2018-ஆம் ஆண்டில் பல்வேறு சந்தைகளில் மொத்தம் 24 ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தும் என்று எக்ஸ்டிஏ- டெவலப்பர்கள் வெளியிட்டுள்ளதொரு அறிக்கை கூறுகிறது.
அதில் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ மற்றும் நோட் 9 உட்பட வேறு என்னென்ன கருவிகள் இடம்பெறும் என்பதை பற்றிய விரிவான தொகுப்பை நாம் இங்கே காணலாம்.
முதலில் வெளியான அறிக்கையின்படி வெளியாகப்போகும் அனைத்து 24 சாதனங்களும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்கமுறைமை கொண்டிருக்குமென்பதையும், வெளியாகப்போகும் கருவிகள் அதற்கே உரிய குறியீட்டு பெயர்கள் மற்றும் குறியீட்டு எண்களையே பெயர்களாக கொண்டுள்ளன.
நோட் 9 மேற்குறிப்பிட்டுள்ளபடி, சாம்சங் கேலக்ஸி எஸ்9, எஸ்9 + மற்றும் நோட் 9 ஆகிய கருவிகள் 'ஸ்டார்' மற்றும் 'ஸ்டார்2' என அறிக்கையில் குறியிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நோட் 9 ஆனது 'க்ரவுன்' என குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது.
2018-ன் இறுதியில் வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 'கேலக்ஸி எக்ஸ்' மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எக்ஸ் ஆக இருக்குமென்றும், அது மடக்கக்கூடிய சாதனமாக இருக்குமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தற்போதுவரையிலாக தெரியவில்லை.
கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் மேலும் அஸ்டர்கில்ட் என்கிற குறியீட்டு பெயரை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆக்டிவ் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு அமெரிக்க சந்தையில் ஒரு புதிய முதன்மை தயாரிப்பாக களமிறங்கவுள்ளது
அடுத்ததாக பட்டியலில், சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் கருவிகளுக்கு மேற்பட்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன.கேலக்ஸி சி10 மற்றும் சி10 பிளஸ் அதாவது சாம்சங் கேலக்ஸி சி10 மற்றும் சி10 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் சி10எல்டிஇ மற்றும் சி10பிஎல்டிஇ என்கிற குறியீட்டு பெயர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் வரப்போகிறது. கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8+ (2018) மேலும் வெளியான இந்த அறிக்கையின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8+ (2018) ஸ்மார்ட்போன்களும் கூட ஸ்னாப்டிராகன் சிப்செட்களுடன் வெளியாகலாம்.
மேலும் அவைகளின் குறியீட்டு பெயர்களை பொறுத்தமட்டில் - ஜாக்போட்க்ல்ட் மற்றும் ஜாக்போட்2க்லட் ஆகும். மேலும் இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் பிரைஸ் பிளஸ் (2018) ஆனது ஐரிஸ் ஸ்கேனர் கொண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட சாதனங்களில் இறுதியாக முற்றிலும் கண்டுபிடிக்கப்படமுடியாத லுகில்ட் எனும் கருவியும் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி பல வகையான டாப்ளெட்களும் இந்தாண்டு வெளியாகவுள்ளது சாம்சங் கேலக்ஸி டாப் 4 (2018), சாம்சங் கேலக்ஸி டாப் ஏ 10.1 2018, சாம்சங் கேலக்ஸி டாப் இ 2018 மற்றும் சாம்சங் கேலக்ஸி டாப் எஸ்4 ஆகியவைகள் வெளியாகவுள்ளது. உடன் ஜிஎஸ்4 எல்எல்டிஇ என்ற குறியீட்டு பெயருடன் பட்டியலில் ஒரு அறியப்படாத டாப்ளெட் ஒன்றும் உள்ளது.
இக்கருவிகள் அனைத்துமே அதிகாரப்பூர்வ ஓரியோ பீட்டா பதிப்பை பட்டியலிட்டுள்ளதால் இவைகக் அனைத்துமே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்கும்

Tags