Home » விஞ்ஞானம் & தொழில்நுட்பம் » உலகிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி செவ்வாய்க்குச் சென்ற கார்.

உலகிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி செவ்வாய்க்குச் சென்ற கார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏலன் மாஸ்க், உலகின் மிகபெரிய ராக்கெட்டை புதன் கிழமை நண்பகலில் அமெரிக்காவில் இருந்து அனுப்பியுள்ளார். இந்த ராக்கெட்டில் முழு நம்பிக்கையோடு விலை உயர்ந்த கார் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கார் வரும் திங்களில் இருந்து செவ்வாயை நோக்கி பயணிக்க உள்ளது. இந்த தகவல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சென்று சேர்ந்த பிறகு வெளியிடப்பட்டது ஏலன் மாஸ்க்கின் இந்தச் செயல் உலகிற்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

👤 Saravana Rajendran7 Feb 2018 6:41 AM GMT
உலகிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி செவ்வாய்க்குச் சென்ற கார்.
Share Post

பல்கான் ஹெவி என்ற ராக்கெட் ஸ்பேக்ஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் விண்ணிற்கு அனுப்பப் பட்டது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக தன்னுடைய இலக்கை அடைந்த பிறகு அதன் தொழில் நுட்பப் படத்தையும் ஏவப்பட்ட விதத்தையும் ஏலன் மாஸ்க் வெளியிட்டுள்ளார்.
இந்த பால்கான் ஹெவி விண்ணிற்கு செலுத்திய துணை ராக்கெட்டுகள் மீண்டும் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தது, இதுமிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். இதுவரை அனுப்பிய எல்லா ராக்கெட்டுகளும் எரிந்து கடலில் விழுந்துவிடும். பிறகு அவற்றைப் பயன்படுத்த முடியாது, ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த ராக்கேட்டை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள இந்த ராக்கெட்களை மீண்டும் அடுத்த பயணத்திற்கு பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரிரெட் டெஸ்லா' கார் செல்லும் பாதையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது அந்தக் கார் ஆஸ்திரேலியாவிற்கு நேர் மேலே மிதந்துகொண்டு இருக்கும் படம் வெளியாகி உள்ளது.
இதில் இருக்கும் கருவிகள் மூலம் அக்கார் செவ்வாய் நோக்கிச் செல்லும் பாதை நேரடியாக ஒளிபரப்பு செய்துவருகிறது. இந்த நேரடி ஒளிபரப்பு நமக்கு காட்டப்படாது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கருவிகள் மூலம் அவர்கள் மட்டுமே அதைப் பார்க்க முடியும், சில முக்கியமான நிகழ்வுகளை மட்டுமே அவர்கள் நமக்கு செய்தியாகவும் படமாகவும் வெளியிடுவார்கள். தற்போது காரில் சில நிமிட பயணத்தை காணொளியில் வெளியிட்டுள்ளனர். திங்களன்று தனது பயணத்தை செவ்வாய் கோள் நோக்கி செல்ல ஆரம்பிக்கும். 6 அல்லது 12 மாதங்கள் கடந்த பிறகு செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடையும். தற்போது 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.
இக்கார் எவ்விதமான எரிபொருள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் விண்ணில் மிதந்து செல்லும் என்று இதுவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறவில்லை, மேலும் செவ்வாயில் எவ்வாறு தரையிரங்கும் என்பதையும் அந்நிறுவனம் கூறவில்லை.

Tags